Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் பொக்குவருத்து, காணி, நீர் பாசனம், பொருலாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு
முகப்பு

தாபனப் பின்னணி

ஊவா மாகாணசபையின் நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள், போக்குவரத்து, காணி, பொருளாதார மேம்பாடு மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளும் நிர்மாணத்துறையும் அமைச்சின் கீழ் வருகின்ற ஊவா மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் 2009 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் தாபிக்கப்பட்டது.


ஊவா மாகாணம் பமுறை மற்றும் மொனறாகல ஆகிய இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதோடு, நீர்ப்பாசன அபிவிருத்திப் பணிகள் இவ்விரு மாவட்டங்களையும் உள்ளடக்கத்தக்கதாக மேற்கொள்ளப்படுகின்றது.


ஊவா மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு 9951 சதுர கிலோ மீற்றர்களாக அமைவதோடு ஏறக்குறைய 1.5 மில்லியன் சனத்தொகையையும் கொண்டுள்ளது. இங்கு பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதோடு, இங்கு மிகவும் முன்னேற்றமடைந்த நீர் நாகரிகம் இருந்துள்ளது.


எனினும், ஐரோப்பியர்களால் மலையகத்தில் தேயிலை, கோப்பி செய்கையை ஆரம்பிக்கப்பட்டதால் இடம்பெற்ற காடழிப்பு காரணமாக நீர் நாகரீகத்தில் இடம்பெறுகின்ற சமநிலையின்மை காரணமாக விவசாய செய்கை நிலங்களுக்கு பாரியளவில் சேதமேற்பட்டுள்ளது. இதன் விளைவாக விவசாய உற்பத்தி செயலிழந்து அபிவிருத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு இடம்பெற்றது.


அன்று தொட்டு இன்று வரை ஊவா மாகாணம் பல்வேறு மாற்றங்களை எதிர்நோக்கியதோடு, அது விவசாயம் மீது நேரடியான தாக்கத்ததை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசாங்கங்களின் கீழ் விவசாயத்தை மேம்படுத்த துணைபுரிகின்ற நீர்ப்பாசனத் திட்டங்களின் நிர்மாணிப்புக்களும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் பலவிதமாக இடம்பெற்றது. அதன் விளைவாக தற்காலத்தில் ஒரு சில புராதன குளங்களும் அணைக்கட்டுகளும் மறுசீரமைக்கப்பட்டு பாவனைக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. இவை மத்தியில் மேலும் பல குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் கால்வாய்களை மறுசீரமைத்து பாவனைக்கு எடுக்கக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.


குறிப்பாக பதுளை மாவட்டத்தின் மஹியங்கன, ரிதீமாலியத்த, கந்தகெட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளில் போன்றே மொனறாகல மாவட்டம் பூராவும் வசிக்கின்ற மக்களுக்கு வருடம் முழுவதிலும் தமது பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக நீரை வழங்க முடியுமாயின் ஊவா மாகாணத்தில் மிகப்பெரிய பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக  அமையும்.

 
ஏப்ரயில் 2020
S M T W T F S
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 1 2

The Government Information centerr